Yoga tips.healthy tips, earn money online

Saturday, September 5, 2020

/ இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது? அவற்றின் நன்மைகள் தீமைகள்:

இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது? அவற்றின் நன்மைகள் தீமைகள்:


இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது? அவற்றின் நன்மைகள் தீமைகள்:


இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது? அவற்றின் நன்மைகள் தீமைகள்:

இதயம் ஒலிப்பு அல்லது உயிர்முதல் (அதாவது உயிர் வாழ்வதற்கான முதலான ஒன்று அல்லது முதன்மையான ஒன்று) (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது குருதிச் சுற்றோட்டத்தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படுகின்றன. ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதிக்குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும். இதன்மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் ஊட்டப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றன.


முதுகெலும்பிகளில் இதயமானது இதயத்தசை என்னும் தானே இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 அடிப்புகள் ஆகும். ஒரு 66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ் நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இதயம் பெண்களில் சராசரியாக 250300 கிராமும் (911 அவுன்சு) ஆண்களில் 300350 கிராம் (1112 அவுன்சு) எடை கொண்டுள்ளது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் அல்லது நாளங்கள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் அல்லது நாடிகள் எனவும் அழைக்கப்படுகின்றது. இதயமானது ஒரு பாதுகாப்புப் பையினுள் அமைந்துள்ளது, இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படும். 

இதய வெளியுறைப்பையுள் காணப்படும் நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகின்றன. மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட இதய மின்கடத்துகை ஒருங்கியம் மிகவும் உதவுகின்றது.
இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது? அவற்றின் நன்மைகள் தீமைகள்:

1.இதய அடைப்பிதழ்:


மனிதன் உட்பட முலையூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகிறது. இதய மேலறைகளுக்கும் இதயக் கீழறைகளுக்கும் இடையே குருதியோட்டத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு அடைப்பிதழ்கள், இடது புறத்தில் இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் மற்றும் வலது புறத்தில் மூன்று இதழ்களைக் கொண்ட முக்கூர் அடைப்பிதழ் ஆகியன ஆகும்.
 இவற்றின் இதழ்கள் இதயவாயினாண்கள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன  இதயவாயினாண்கள் நுண்காம்புத்தசை மூலம் கீழறைச் சுவருடன் தொடுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு இதழ்களும் ஒவ்வொரு நுண்காம்புத்தசையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் இரண்டு நுண்காம்புத்தசை மூலம் இடது கீழறைச் சுவருடன் தொடுக்கப்படுகின்றன.




இதயக் கீழறைகளுக்கும் வெளியேறும் தமனிகளுக்கும் இடையே உள்ள அடைப்பிதழ்கள் அரைமதி அடைப்பிதழ்கள் ஆகும். பெருநாடி அடைப்பிதழ் இடது கீழ் இதயவறைக்கும் பெருநாடிக்கும் இடையில் அமைந்துள்ளது. நுரையீரல் அடைப்பிதழ் வலது கீழ் இதயவறைக்கும் நுரையீரல் நாடிக்கும் இடையில் அமைந்து இருகின்றன. இவை நுண்காம்புத்தசையுடன் தொடுக்கப்பட்டிருப்பது இல்லை.


2.அமைவிடம் மற்றும் வடிவம்:

நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் ஐந்தும் எட்டும் உள்ள மட்டத்தில் நடு மார்பிடையப் பகுதியில்  இரட்டை மென்சவ்வாலான ஒரு பாதுகாப்புப் பையினுள் மனித இதயம் அமைந்து உள்ளன. இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படுகிறது. வெளியுறைப்பை மார்பிடையத்துடன் ஒட்டிக் காணப்படும். இரண்டு அடுக்காக இருக்கும் இதய வெளியுறைப்பையுள் நீர்மம் காணப்படுகின்றன. இந்த நீர்மமானது இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத் திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும். மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளன.


இதயத்தின் பின்புறப்பகுதி முள்ளந்தண்டெலும்புகளின் முன்பாக அமைந்து இருக்கிறன. இதயத்தின் முற்பகுதி மார்புப்பட்டை மற்றும் விலாக் கசியிழையங்களின் பின்னே அமைந்துள்ளது. இதயத்தின் மேற்பகுதியில் பெரு நாடிகளும் நாளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது விலா என்புக் கசியிழைய மட்டத்தில் இதய மேற்பகுதி அமைந்துள்ளது இதயம் கூம்பு வடிவானது. இதயமுனை எனப்படும் இதயத்தின் கீழ் முனைப்பகுதி மார்புப்பட்டையின் இடப்புறத்தே அமைந்து உள்ளது.


இதயத்தின் பெரும்பான்மைப் பகுதி இடது மார்பில் அமைந்து உள்ளன.(உள்ளுறுப்பு இடப்பிறழ்வில் வலது புறம் அமைந்திருக்கும்). நுரையீரல் தவிர்ந்த உடலின் அனைத்துப் பகுதிக்கும் குருதியைச் செலுத்துவதற்காக இதயத்தின் இடது பகுதி வலிமை மிக்கதாக அமைந்து இருக்கிறது இதயம் இடது, வலது நுரையீரல்களின் இடையே காணப்படுவதால் இடது நுரையீரலில் இதயம் அமையக்கூடியவாறு ஒரு பள்ளம் உள்ளது. இதனால் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கிறது.யமானது இதயத்தசை என்னும் தன்விருப்பில்லாது தானே இயங்கும் வரித்தசையால் ஆனது.


3.இதயவறை:

இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. குருதியைப் பெற்றுக்கொள்ளும் இரண்டு மேலறைகள், குருதியை வெளியேற்றும் இரண்டு கீழறைகள். இதய மேலறை இதயக் கீழறையுடன் மேற்கீழறை அடைப்பிதழ்கள் மூலம் தொடர்புற்று உள்ளன. இவை மேற்கீழறைப் பிரிசுவரில் அமைந்துள்ளன. இடது புறத்தில் காணப்படுவது இருகூர் அடைப்பிதழ் என்றும், வலது புறத்தில் காணப்படுவது முக்கூர் அடைப்பிதழ் என்றும் அழைக்கப்படுகின்றன.மேற்கீழறைப் பிரிசுவரால் இதயம் பிரிக்கப்படுவது இதயத்தின் வெளிப்புறத்தில் முடியுரு வரிப்பள்ளம்  எனும் வெட்டாகத் தென்படுகின்றன.

 இடது மற்றும் வலது இதய மேலறைகளில் காது போன்ற அமைப்புடைய நீட்டம் ஒன்று காணப்படும், இதுவும் ஒரு சிறிய அறை போன்ற அமைப்பிலேயே காணப்படுகின்றன. இது இதய மேலறை நீட்டம் அல்லது இதய மேலறைச் சோணை எனப்படும்.இடது மேல் மற்றும் கீழ் இதயவறைகள் சேர்ந்து இடது இதயம் என்று அழைக்கப்படுகிறது. இதே போன்று வலது இதயவறைகள் சேர்ந்து வலது இதயம் என்று அழைக்கப்படுகின்றன. இதயக் கீழ் அறைகள் இரண்டும் கீழறைப் பிரிசுவர் மூலம் பிரிக்கப்படுகின்றது. இதயத்தின் கீழறைகள் மேலறைகளை விட தடிப்பாக இருக்கின்றன. அதிலும் இடது கீழறையானது குருதியை உடல் முழுவதும் செலுத்துவதற்கு அதிக வேகம் தேவைப்படுவதால் அது வலது கீழறையை விட தடிப்பாக உள்ளன.
இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது? அவற்றின் நன்மைகள் தீமைகள்:

4.அமைப்பு:
இதயத்தின் அமைப்பு பல்வேறு விலங்குகளுக்குஇடையில்வேறுபடுகின்றதுதலைக்காலிகளில்  இரண்டு "செவுள் இதயமும்"  ஒரு "தொகுதி இதயமும்" அமைந்து உள்ளன. முதுகெலும்பிகளில் உடலின் முன் பகுதியில் பாட்டுத்தொகுதிக்குப் பின்புறத்தில் இருதயம் அமைந்துள்ளது. எப்பொழுதும் இதய வெளியுறை சுற்றுச்சவ்வினால் சூழப்பட்டிருக்கும்.



5.இதய சுவர்:

வெளியில் மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி),

நடுவில் இதயத்தசைப் படை, உள்ளே இதய அகவுறைப்படை ஆகிய மூன்று 

படைகளால் 

இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டு உள்ளது. இதய அகவுறைப்படை எளிய 

செதிண்மேலணிக் கலங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இது இதய அறைகளையும் 

அடைப்பிதழ்களையும் மூடிக் காணப்படுகிறது. இது நாடி மற்றும் நாளங்களின் 

அகவணிக் கலங்களாகத் தொடர்ச்சி பெறுகின்றது. மேலும் மெல்லிய படை 

தொடுப்பிழையம் மூலம் இதயத்தசைப் படையுடன் இணைகின்றது. 

என்டோதீலின் அல்லது அகவணியன் எனப்படும் புரதக்கூறு அகவணிக் கலம் 

மூலம் சுரக்கப்படுகின்றன இதயத்தின் சுருங்கி விரிதலைக் கட்டுப்படுத்துவதில்

 இவையும் ஒரு அங்கம் வகிக்கின்றன


நடு இதயத்தசைப் படையை ஆக்கும் இதயத்தசை இச்சையில்லா இயங்கும் வரித்தசையால் ஆனது. இதயத்தசை இரண்டுவிதமான கலங்களைக் கொண்டுள்ளது, சுருங்கும் தொழிலைச் செய்யும் தசைக் கலங்கள் மற்றும் இதய மின்கடத்துகை ஒருங்கியத்துக்குரிய துடிப்புச்சீராக்கிக் கலங்கள்  இவற்றுள் இதயத்தசை பெரும்பான்மையானது  மீதியுள்ளவை  துடிப்புச்சீராக்கிக் கலங்கள் ஆகும்.

இதய வெளியுறைப்பையால் இதயம் சூழப்படுகின்றன. இது இரண்டு படை 

மென்சவ்வுகளை உடையது. வெளியில் அமைந்துள்ள நார்ச்சவ்வுப்படை, நார்ச்சவ்வு 

வெளியுறை எனப்படும். உட்புறத்தே அமைந்துள்ள நீர்ச்சவ்வுப் படை மேல்

 இதயவுறைப் படை எனப்படும். இவை இரண்டிற்குமிடையே வெளியுறை நீர்மம் 

உள்ளன.



6.இதயத்தை எப்படிக் காக்கலாம்?

இன்று பெரும்பாலானோர் பொருள் ஈட்டுவதில் காட்டும் ஆர்வம் காட்டுகிறார்கள். 

தங்கள் உடம்பைப் பேணுவதில் காட்டுவதில்லை.

இது அவசர யுகம்என்று சமாதானம் சொல்லிக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும்

நாம், ஆரோக்கியம்தான் அனைத்துக்கும் அடிப்படை என்பதை மறந்து விடுகிறோம்.
அதிலும் முக்கியமாக, நமது ரத்த பம்பிங் ஸ்டேஷன்ஆன இதயத்தின் ஆரோக்கியம் காப்பதன் அவசியத்தை நாம் அவ்வளவாக 
உணர்ந்திருக்கவில்லை. ஆனால் இதயம் முடங்கும்போது அது உயிர் ஆபத்தையே ஏற்படுத்தி விடுகின்றன.

சரி, துடித்துக்கொண்டே இருக்கும் இதயத்தை எப்படிக் காப்பது? இதோ இந்த வழிகளைப் பயன்படுத்த வேண்டும்.

ஆப்பிள், மருத்துவரை நெருங்கவிடாமல் தடுக்கும் என்று கூறுகிறார்கள்.ஆப்பிள் இதயத்துக்கும் மிகவும் நல்லது. இது ரத்தம் உறைவதைத் தடுக்கும். எனவே அன்றாடம் ஆப்பிள் சாப்பிட்டு வர வேண்டும்.

கீரைகளில் இதயத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் உள்ளது. எனவே தினமும் உணவில் ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முழு தானியங்களை அதிக அளவில் அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலுச் சேர்க்கும், இதயத்தைப் பாதுகாக்கும்.

ஓட்சில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது

பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் உள்ளது. இது உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். இதயநோய் நெருங்காமல் தடை போடும்.

தினமும் மாதுளம் பழச்சாறு பருகுவதும் இதயநோயில் இருந்து நம்மைக் காக்கின்றன.

ஸ்டிராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பழவகைகளில் அதிக அளவு வைட்டமின் சி’, கால்சியம், பீட்டா கரோட்டின் சத்துகள் உள்ளது.தினமும் காலையில் ஓட்சுடன் புளூபெர்ரி பழம் சாப்பிட்டால் இதயம் சீராக இயங்கும்.

சோயா, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயநோய் வருவதைத் தடுக்கிறது. காலையில் பாலுக்குப் பதில் சோயா பாலை அருந்தினால் இதயம் வலுப்பெறும்.

உப்பு, இதயத்துக்கு எதிரி. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம் இதயம் குறித்து கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

டீயில் உள்ள பிளேவனாய்டுகள் ரத்த நாளங்களை மேம் படுத்தி அவற்றை ஓய்வெடுக்க வைக்கும். இதயத்தின் நலம் காக்க தினமும் இரண்டு கப் டீ பருகலாம்.
இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது? அவற்றின் நன்மைகள் தீமைகள்:


சாக்லேட்டும் இதயத்துக்கு நன்மை பயக்கிறது. ஆனால் மில்க் சாக்லேட்டை காட்டிலும், டார்க் சாக்லேட்டை சாப்பிடுங்கள். டார்க் சாக்லேட்டின் கோக்கோவில் பிளேவனாய்டுகள் அதிகம் உள்ளதால் அவை ரத்த உறை தலைத் தடுக்கிறது.

இதயத்தைப் பாதுகாக்கும் சிறந்த வழிகளில் ஒன்று, நீச்சல் பயிற்சி. நீச்சல் அடிக்கும்போது இதயம் சுறுசுறுப்பாகச் செயல் படும். அது இதயத் துடிப்புக்கு நல்ல பயிற்சியாகவும் அமைகின்றன.

தியானக் கலையின் மூலம் நரம்பியல் அமைப்பை சாந்தப்படுத்தினால் அது இதய வால்வு, இதயச் சுவர் பாதிப்பில் இருந்து காக்கின்றன.

வைட்டமின் பி அடங்கிய உணவுகள் இதயத்துக்கு மிகவும் நல்லது. அவை இதய நோய்களை அண்ட விடாமல் தடுக்கின்றன. அவகேடோ மற்றும் கடல் உணவுகள், வைட்டமின் பி அடங்கிய உணவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

சில நேரங்களில், நரம்பியல் அமைப்பைச் சாந்தப்படுத்தும் காரியத்தில் ஈடுபட்டால், அது இதயத்துக்கு நன்மையை விளைவிக்கும். உதாரணமாக, மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட வேன்டும்.

இதய ஆரோக்கியத்துக்கு, கோதுமை ரொட்டியும் உதவும். அதோடு, ‘நட்ஸ்எனப்படும் பருப்பு வகைகளும் மனித உடலுக்கு நன்மை பயன் அளிக்கிறது. ஆனால் சிலருக்கு சிலவகை பருப்பு வகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதை அறிந்து பயன்படுத்துவது மிகவும் நல்லது.

எல்லாவற்றுக்கும் மேலாக, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைதான் இதயம் காக்கும் கவசம். அதிகாலையிலேயே எழுந்து, நடை, மெல்லோட்டம், உடற்பயிற்சி என்று சுறு சுறுப்பாக நாளைத் தொடங்குவது மிகவும் நல்லது.
IF YOU LIKE THIS NEWS PLEASE DO LIKE,SHARE AND SUBSCRIBE.









































No comments:

Post a Comment

please do not enter any spam link in the comment box